Skip to main content

பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் மீது ஜோ பைடன் தாக்கு!

Nov 04, 2021 128 views Posted By : YarlSri TV
Image

பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் மீது ஜோ பைடன் தாக்கு! 

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடந்து வருகிறது. உலகளாவிய வெப்பநிலையை குறைப்பதில் முக்கிய பங்காற்றப்போகிற இந்த மாநாட்டில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தூதுக்குழுக்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளனர்.இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசியபோது இதை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:



உலகத்தின் தலைவராக சீனா புதிய பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஜின்பிங் கலந்து கொள்ளாதது மாபெரும் தவறு.ரஷியாவில் காடு எரிகிறது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் இதில் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். புதினின் செயலாளர் திமிட்ரி பெஸ்கோவ், ரஷிய அதிபர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என கடந்த மாதம் அறிவித்தபோது, அதற்கான காரணத்தைக்கூறவில்லை. பருவநிலை மாற்றம், ரஷியா முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ஆகும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை