Skip to main content

தடுப்பூசி போட்ட வெளிநாட்டினரை அனுமதிக்க அமெரிக்கா முடிவு!

Sep 21, 2021 164 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசி போட்ட வெளிநாட்டினரை அனுமதிக்க அமெரிக்கா முடிவு! 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியின் பலனாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.



இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.



இதற்கு முன் இந்தியா, சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் 14 நாட்கள் தங்கிய அமெரிக்க குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.



இந்தநிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினரும், அமெரிக்க குடிமக்களும் அமெரிக்க வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.



அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் விமானம் ஏறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் (தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்) கட்டயாமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை