Skip to main content

செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு :

Jan 14, 2022 100 views Posted By : YarlSri TV
Image

செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு :  

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில்  சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல்குமார் என்ற மகன் இருந்துள்ளார்.



இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி கொண்டிருந்த விமல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.



ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் விமல் குமார் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பெற்றோர் விமல் குமாரிடம் இருந்து செல்போனை பறித்து வீட்டில் மறைத்து வைத்துவிட்டனர்.



அதன்பின் விமல்குமாரின் பெற்றோர் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.



இந்நிலையில் பெற்றோர் செல்போனை வாங்கிக் கொண்டதை நினைத்து மன உளைச்சலில் இருந்த விமல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.



இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.



மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை