Skip to main content

உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!..

Jan 12, 2022 93 views Posted By : YarlSri TV
Image

உங்கள் வீட்டில் பொங்கல் சாப்பிட முடியாமல் உள்ளார்களா? இதைச் செய்து பாருங்கள்!.. 

pongal பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது வீடுகளிலும் கரும்பு வாங்குவது வாடிக்கையான ஒன்று. ஆனால் ஒரு சில வீடுகளில், வாங்கிய கரும்பை யாரும் உண்ணாமல் அது அப்படியே காய்ந்து கிடக்கும். இனி அது போல கரும்பை விடவேண்டிய அவசியம் இல்லை. கரும்பை வெட்டி அதில் இருந்து சாறு எடுத்து, அதன் மூலம் செய்ய கூடிய அருமையான கரும்பு சாறு பொங்கலை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.



pongal



தேவையான பொருட்கள்:

1/2 கப் பச்சரிசி, 1/4 கப் பாசிப் பருப்பு, 3 கப் கரும்பு சாறு, 3 முதல் 4 டீ ஸ்பூன் நெய், 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள், 8 முந்திரி, 10 காய்ந்த திராட்சை, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம்.



செய்முறை:

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் நெய் விடவேண்டும். பிறகு அதோடு 1/4 கப் பாசிப் பருப்பு சேர்த்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வறுக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவிய 1/2 கப் பச்சரிசியை எடுத்துக்கொண்டு அதோடு, வறுத்தெடுத்த பாசிப் பருப்பை சேர்த்துக்கொள்ளவேண்டும்.



arisi paruppu



இந்த கலவையோடு 3 கப் கரும்புச் சாறை சேர்க்க வேண்டும். பின்பு இதை குக்கரில் வைத்து 5 முதல் 6 விசில் வரும் வரை விட வேண்டும்.பின்பு குக்கரை திறந்து அதில் உள்ளவை அனைத்தும் சிறிதளவு மசியும் வகையில் சற்று அழுத்தியவாறு கிளறிவிட வேண்டும்.



பின்பு இந்த கலவையோடு 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். அடுத்ததாக மீண்டும் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 3 டீ ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும். பிறகு அதில் 8 முந்திரியை சேர்த்து, முந்திரி இளம் பழுப்பு நிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதில் 10 காய்ந்த திராட்சை சேர்த்து ஓர் இரு நிமிடங்கள் வதக்க வேண்டும்.



pongal



பின்பு இந்த கலவையை, ஏற்கனவே சமைத்து வைத்துள்ள பொங்கலோடு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான கரும்பு ஜூஸ் பொங்கல் தயார். இதில் இனிப்பு சற்று அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.



 


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை