Skip to main content

‘மோடி- பணவீக்கம்’ இரண்டும் நாட்டிற்கு தீங்கு- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விமர்சனம்!

Jan 02, 2022 80 views Posted By : YarlSri TV
Image

‘மோடி- பணவீக்கம்’ இரண்டும் நாட்டிற்கு தீங்கு- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விமர்சனம்! 

உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் தேர்தல், பேரணிகளை ஒத்தி வைக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், குறித்த நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தியதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.



எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம என்ற சூழ்நிலையில் பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், கோடிக்கணக்கான தொகையில் உருவாக இருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.



இதற்கிடையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியை எப்பாடியாவது வீழ்த்தியே தீர வேண்டும். உத்தர பிரதேசத்தில் முக்கிய கட்சியாக திகழ வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. இதனால் பிரயங்கா காந்தியை முன்னிறுத்தில் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.



காங்கிரஸ் தலைவர்கள் உத்தர பிரதேச மாநில அரசையும், மத்திய பா.ஜனதா அரைசையும் விமர்சித்து வருகிறது.



இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நேற்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.



அப்போது அளித்த பேட்டியின்போது, ‘‘புத்தாண்டு தினத்தில் மோடி, பண வீக்கத்தில் மேலும் தாக்குதலை உருவாக்கியுள்ளார். புத்தாண்டின் முதல் நாளில் மக்கள் மோடிய அரசின் புதிய பரிசாக பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையை பெற்றுள்ளனர்.



2011-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது வேலைவாய்ப்பின்மை 2 சதவீதமாக இருந்தது. இன்று இளைஞர்களுக்கு எதிரான கொள்ளையை கொண்ட பா.ஜனதா அரசில் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.



பணவீக்கம் சுமை உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விற்பனை விலை குறியீடு 2021 நவம்பரில் 14.23 சதவீதமாக இருந்தது. கடைசி 10 வருடத்தில் இது மிகவும் அதிகமானதாகும். அதன் தாக்கம் புத்தாண்டில் விரைவாக வெளிப்படும்.



புத்தாண்டுக்குள் நுழைந்துள்ள மக்கள் இரும்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரத்திற்காக அதிக அளவில் பணம் செலுத்த அவர்களது பாக்கெட்டை வைத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.



மோடி இருந்தால், அங்கே பண வீக்கம் இருக்கும். மோடி- பணவீக்கம் நாட்டிற்கு தீங்கானது என்று மக்கள் தற்போது தெளிவாக பேசத் தொடங்கியுள்ளனர்’’ என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை